Regional03

இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி :

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது.

நிகழ்வுக்கு, வேளாண் உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னோடி இயற்கை விவசாயி உதயகுமார், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில், பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், தசகாவியம், பூச்சிவிரட்டி, கரைசல் தயாரிப்பது குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப்பயிற்சியில், 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில், வலங்கைமான் வட்டார தொழில்நுட்ப மேலாளர் விக்னேஷ், உதவி மேலாளர் சதீஷ்குமார், பிரியங்கா ஆகியோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT