Regional01

பணி நிரந்தரம் செய்ய டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்க (சிஐடியு) கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. கூட்டத்துக்குமாவட்டத் தலைவர் மாரியப்பன்தலைமை வகித்தார். நிர்வாகிகள்சரவண பெருமாள், சிவன்ராஜ்,சுப்பிரமணியன், உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ‘கடந்த 18 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றகோரிக்கை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 5-ம் தேதி கோரிக்கைஅட்டை அணிந்து பணியாற்றுவது, கோரிக்கைகள் குறித்து மாவட்ட மேலாளரை சந்தித்துமுறையிடுவது, கடை நடைமுறைகளில் சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சியினர் தலையீடுகள் குறித்து தமிழக முதல்வர் மற்றும் மேலாண்மை இயக்குநரின் கவனத்துக்கு கொண்டுசெல்வது’ என முடிவு செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT