Regional02

ஊரக புத்தாக்கத் திட்ட ஆலோசனை கூட்டம் :

செய்திப்பிரிவு

தமிழக அரசு, உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்திவரும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்க திட்டமானது ஊரகதொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல், வருமானத்தைபெருக்குதல் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு ராதாபுரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை மற்றும் வள்ளியூர் ஆகிய 4 வட்டாரங்களைச் சேர்ந்த 102 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் சார்ந்த வருங்கால செயல் திட்டம் குறித்து பிறதுறை அலுவலர்களுக்கான விளக்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசும்போது, ‘‘அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து இளைஞர்கள் சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிராமமக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவிட வேண்டும். கிராமப் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைளை எடுக்க வேண்டும்’’ என்று தெரி வித்தார்.

SCROLL FOR NEXT