TNadu

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு :

செய்திப்பிரிவு

மேட்டூர் அணையில் இருந்துகாவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவுவிநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரிநீர்ப்பிடிப்புப் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்குநேற்று முன்தினம் விநாடிக்கு 30,199 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு22,942 கனஅடியாக குறைந்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் திறப்பு, நேற்று முதல் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீர் திறப்பைக் காட்டிலும், நீர்வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை நீர்மட்டம் 81.97 அடியாக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT