Regional02

ரூ.17 லட்சம் முறைகேடு கோயில் ஊழியர் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் அடுத்த சுள்ளங்குடி பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக சென்னையைச் சேர்ந்த ரமேஷின் தாத்தா நாராயண னுக்குச் சொந்தமான 48 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், அதே பகுதியைச் சேர்ந்தவரும், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் காவலாளியுமான பழனியப்பன் அரசு கையகப் படுத்திய நிலம் தனது தந்தை நாராயணனுக்குரியது என போலி ஆவணம் தயாரித்து ரூ.17,84,218 இழப்பீட்டுத் தொகையை பெற்றார். ரமேஷ் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து பழனியப்பனை தேடி வருகின்றனர். பழனியப்பனை கோயில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

SCROLL FOR NEXT