Regional02

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் :

செய்திப்பிரிவு

காரைக்குடி காந்திபுரம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவர், குடும்பச் சொத்து தொடர்பான பிரச்சினையில் தனது அண்ணன் மகன் சரவணனிடம் சமரசம் பேசியுள்ளார்.

இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் சரவணன் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்.17-ம் தேதி ஆறுமுகத்தை கம்பால் தாக்கி கொலை செய்தார்.

காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து சரவணனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. சரவணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சுமதிசாய்பிரியா தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT