மலேசியாவிலிருந்து நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்தவர் களின் ஆவணங்களை விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, நாகப்பட்டினம் மாவட்டம் சேந்தன்குடியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் செல்வம்(45) என்பவர் தனது பாஸ்போர்ட்டில் தந்தையின் பெயரை மாற்றிக் கொடுத்து, அதன்மூலம் பெற்ற பாஸ் போர்ட்டை பயன்படுத்தி மலே சியா சென்று வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து குடியேற் றப்பிரிவு அலுவலர் இளைய ராஜா அளித்த புகாரின் பேரில், விமானநிலைய போலீஸார் செல்வத்தை கைது செய்தனர்.