Regional01

இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞர் கைது :

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் ஜங்கம்மா ராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்(25). தில்லைநகரிலுள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரை இரு மாதங்களுக்கு முன் நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. இந்நிலையில், தனியார் மருந்து நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் வந்த பாலமுருகன் தனக்கு வர வேண்டிய மீதி சம்பளத்தைக் கேட்டுள்ளார். அப்போது, பாலமுருகனுக்கும் நிர்வாகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த பாலமுருகன் வெளியேவந்து, தனது இருசக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை பிடித்து, அந்நிறுவனத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் 4 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்த புகாரின்பேரில், தில்லைநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT