Regional01

விதிமீறி இயக்கப்பட்ட 7 வாகனங்கள் பறிமுதல்: ரூ.3.76 லட்சம் அபராதம் :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நேற்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனி சாமி, ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போலீஸார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்ட னர்.

அப்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறி சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல், அதிக பாரம் ஏற்றிச் செல்லுதல், தகுதிச் சான்று, ஓட்டுநர் உரிமம், காப்பு சான்று இல்லாமல் வாகனங் களை இயக்கியது தொடர்பாக 7 வாகனங்கள் பறிமுதல் செய் யப்பட்டன. அந்த வாகனங் களுக்கு ரூ.3.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT