Regional02

கரூர் மாரியம்மன் கோயிலில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு :

செய்திப்பிரிவு

கரூர் மாரியம்மன் கோயிலுக்கு வந்த பெண்ணிடம் 5 பவுன் நகையை அடையாளம் தெரி யாத நபர் பறித்துச் சென்றார்.

ஆடி 2-வது வெள்ளிக் கிழமையையொட்டி, கரூர் மாரியம்மன் கோயிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். அப்போது, கரூர் பசுபதிபாளையம் அருணாச் சலம் நகரைச் சேர்ந்த தனலட்சுமி(50) என்பவர், தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்து, அம்மனை தரிசனம் செய்தார். பின்னர், கோயிலுக்கு வெளியே வந்து சூடமேற்றி வழிபட்டுக் கொண்டிருந்தபோது, தனலட்சுமி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு, தப்பியோடிவிட்டார். இதுதொடர்பாக, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து, கரூர் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, கரூர் தெற்கு காந்திகிராமம் ராஜா நகரைச் சேர்ந்த பழனிசாமி மனைவி அம்பிகா(43), பொரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் சத்துணவு மையத்தில் பணியில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், அம்பிகா அணிந்திருந்த இரண்டே முக்கால் பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து வெள்ளியணை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT