எம்எல்ஏ சீ.கதிரவனிடம் மனு அளித்த மாணவர் பா.ரித்தீஷ். 
Regional02

ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக மாணவனுக்கு செல்போன் வழங்கிய எம்எல்ஏ :

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருபவர் பா.ரித்தீஷ். கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தன்னிடம் செல்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் படிக்க முடியாமல் சிரமப்படுவ தாகவும், தனக்கு ஒரு செல்போன் வாங்கித் தருமாறும் மண்ணச் சநல்லூர் தொகுதி எம்எல்ஏ சீ.கதிரவனை நேற்று முன்தினம் அவரது எம்எல்ஏ அலுவலகத்தில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, அந்த மாணவனுக்கு எம்எல்ஏ கதிரவன் நேற்று ஒரு புதிய செல்போன் வாங்கிக் கொடுத்தார். அவரது சார்பில் மண்ணச்சநல்லூர் நகரச் செயலாளர் சிவசண்முககுமார் அச்சிறுவனின் வீட்டுக்குச் சென்று செல்போனை ஒப்படைத்தார்.

SCROLL FOR NEXT