Regional01

பண்பொழியில் குளத்தில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

செங்கோட்டை அருகே உள்ளபண்பொழியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (60). அப்பகுதியில் உள்ள குளத்துக்கு குளிக்கச் சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

செங்கோட்டை தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தேடினர். நீண்ட நேர தேடுதலுக்குப் பின்னர், சண்முகசுந்தரத்தின் சடலத்தை மீட்டனர். குளத்தில் ஆழமான பகுதிக்குச் சென்ற அவர், சேற்றில் சிக்கியதால் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அச்சன்புதூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT