மனித கடத்தலால் குழந்தைகள், பெண்கள் அதிகம் பாதிக்கப்படு வதாக தூத்துக்குடி எஸ்பி எஸ்.ஜெயக்குமார் நேற்று தெரிவித்தார்.
மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை முன்னிட்டு, சைல்டுலைன்-1098 சார்பாக, தூத்துக்குடிபுதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தலைமை வகித்து பேசியதாவது: மனித கடத்தல்என்பது பணம் வாங்குவதற்கு மட்டுமல்லாமல், பல வகைகளில் நடக்கிறது. பெண்களை கடத்தி பாலியல்தொழிலில் ஈடுபட வைப்பது, குழந்தைகளை கடத்தி குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணம் செய்வது போன்றவற்றுக்காகவும் கடத்தல் நடக்கிறது.
மனித கடத்தல் தடுக்கப்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனிமனித உரிமைகள் உண்டு. அவை நசுக்கப்படவோ, தடுக்கப்படவோ கூடாது. இந்த கடத்தலைதடுக்க சட்டத்தில் பல சட்டப்பிரிவுகள் உள்ளன. இருப்பினும் இதற்கான விழிப்புணர்வு நம்மிடம்இருக்க வேண்டும். குழந்தைகளுக்கெதிரான எந்த குற்றச் சம்பவங்கள் நடைபெற்றாலும் உடனடியாகசைல்டு லைன்-1098 எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். அதேபோன்று பெண்களுக்கெதிரான குற்ற தடுப்புக்காக 181 என்ற எண்ணை தொடர்பு கொண்டால், அந்த பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்ய ஏதுவாக இருக்கும். மகளிர் காவல் நிலையங்கள், சைபர் க்ரைம் குற்றப்பிரிவு ஆகியவை, பெண்கள் மற்றும் குழந்தைகளைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன, என்றார் எஸ்பி.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு ஏடிஎஸ்பி ஜி.கோபி, மாவட்டசமூகநல அலுவலர் கே.தனலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சைல்டுலைன்- 1098 ஒருங்கிணைப்பாளர் த.காசிராஜன் வரவேற்றார். டிஎஸ்பி கணேஷ், பயிற்சிடிஎஸ்பி சஞ்சீவ் குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்ஏ.இளையராஜா, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் கண்ணாத்தாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.