தி.மலை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2-ம் நிலை காவலருக்கான உடற்தகுதி தேர்வில் பங்கேற்ற பெண்ணுக்கு உயரம் அளவீடு செய்யப்பட்டது. 
Regional02

காவலர் உடற்தகுதி தேர்வில் பெண்கள் பங்கேற்பு :

செய்திப்பிரிவு

தி.மலையில் நேற்று நடைபெற்ற 2-ம் நிலை காவலர்களுக்கான முதற்கட்ட உடற்தகுதி தேர்வில் பெண்கள் பங்கேற்றனர்.

2-ம் நிலை காவலர்களுக்கான முதற்கட்ட உடற்தகுதி தேர்வு தி.மலை ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், உயரம் மற்றும் மார்பளவு அளவிடுதல் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டம் நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, பெண்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. சுமார் 400 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டி ருந்தது. அதில் பலரும் பங்கேற்றனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், உயரம் அளவிடுதல் மற்றும் 400 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டது. முதற்கட்ட உடற்தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது.

SCROLL FOR NEXT