Regional02

கரோனா தொற்றால் உயிரிழந்த கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவி :

செய்திப்பிரிவு

திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் அ.ராஜகுமார் கூறும்போது, ‘‘கரோனா தொற்றால் உயிரிழந்த கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது.

அதன்படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டவர்கள், பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு ஏதுவாகவும், நலத்திட்ட உதவிகளை விரிவுபடுத்துதல் குறித்த திட்டத்தை செயலாக்கம் செய்வதற்கு ஏதுவாகவும் பெற்றோர் ஒருவர் மற்றும் இருவரையும் இழந்த குழந்தைகள் குறித்த விவரங்களை, திருப்பூர் பெருமாநல்லூர் சாலை, 19 காமராஜர் முதல்வீதியில் இயங்கும் தொழிலாளர் உதவி ஆணையர்அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்" என்றார்.

SCROLL FOR NEXT