Regional02

அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் உட்பட 318 பேர் மீது வழக்கு பதிவு :

செய்திப்பிரிவு

திமுக அரசை கண்டித்து காங்கயம் சாலை அமர்ஜோதி நகரிலுள்ள அதிமுக மாவட்ட அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கரோனா நோய் தொற்று காலத்தில் அரசு உத்தரவை மதிக்காமலும், சமூக இடைவெளி கடைபிடிக்காமலும் கூட்டம் கூட்டியதாக, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏ-வுமான பொள்ளாச்சி ஜெயராமன், திருப்பூர் வடக்குசட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.என்.விஜயகுமார்உட்பட 318 பேர் மீது, நல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அங்கேரிபாளையம் அதிமுக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கே.என்.விஜயகுமார் மீது, அனுப்பர்பாளையம் போலீஸார் கூடுதலாக வழக்கு பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT