மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 30 ஆயிரத்து 199 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்து கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 29 ஆயிரத்து 666 கனஅடி இருந்த நீர்வரத்து நேற்று 30 ஆயிரத்து 199 கனஅடியாக உயர்ந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடுவது நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் 79.16 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 80.89 அடியானது. நீர் இருப்பு 42.84 டிஎம்சியாக உள்ளது.