Regional01

தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு :

செய்திப்பிரிவு

திண்டுக்கல்லில் சிவாஜி மன்றம் சார்பில் மன்னர் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திண்டுக்கல் தெற்கு ரத வீதியில் நடந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட சிவாஜி மன்ற இளைஞர் பிரிவு தலைவர் மாரிசெல்வம் தலைமை வகித்தார். தீரன் சின்னமலை படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கறிஞர் பெருமாள் அன்னதானம் வழங்கினார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஒரத்துபாளையம் அணைக்கட்டுக்கு தீரன் சின்னமலை பெயர் சூட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT