நூறு நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
ஈரோடு அரியப்பம்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஏ.கே.பொங்கியண்ணன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் நூறு நாள் வேலைத்திட்டத்தை விரிவாக்க வேண்டும், பெரியூரில் துணை சுகாதார நிலையத்தை ஏற்படுத்த வேண்டும், அழகிரி காலனி பகுதியில் அங்கன்வாடி மையம் ஏற்படுத்த வேண்டும் என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கட்சியின் மாநில குழு உறுப்பினர் சு.மோகன்குமார், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.ஸ்டாலின் சிவக்குமார், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சி.நடராஜ், துணைச் செயலாளர் ஆர்.சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.