Regional02

பெண்ணை பலாத்கார செய்ய முயற்சித்த ஆட்டோ ஓட்டுநர் கைது :

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள விஷ்ணுபுரம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கிய சுந்தரம்(42). சரக்கு ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த 25 வயதான, மனநலம் பாதிக்கப்பட்ட, வாய் பேச இயலாத மாற்றுதிறன் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், நன்னிலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஆரோக்கிய சுந்தரத்தை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT