Regional02

ஆண்டிமடம் பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

வரதராஜன்பேட்டை பேரூராட்சி அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, முதியோர் இல்லம், குப்பைக் கிடங்கு, தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி, ரேஷன் கடை, அப்பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள், பேருந்து நிலையம் மற்றும் சுடுகாடு ஆகியவற்றை பார்வையிட்ட அவர், அப்பகுதிகளில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். ஆய்வின்போது, பேரூராட்சி செயல் அலுவலர் ச.உஷா, இளநிலை பொறியாளர் சுப்பிரமணியன், மருத்துவர் சுகுணா, தொன்போஸ்கோ பள்ளி தாளாளர், பள்ளி தலைமையாசிரியை, முதியோர் இல்ல நிர்வாகி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT