Regional02

கரோனாவுக்கு உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்த விவரங்கள் சேகரிப்பு :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் சிலர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால், அவர்களது குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. அந்தக் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை விரிவுபடுத்தும் வகையில், அரியலூர் மாவட்டத்தில் பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களாக இருந்து கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் குழந்தைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. எனவே, இந்தக் குழந்தைகள் குறித்த விவரங்களை 12, சின்னக்கடை வீதி, அரியலூர் என்ற முகவரியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் தெரிவித்து பயனடையலாம் என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT