Regional02

பொற்பனைக்கோட்டையில் - அகழாய்வு இன்று தொடக்கம் :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணிகள் இன்று(ஜூலை 30) தொடங்குகின்றன.

கோட்டை, கொத்தளங்களோடு உள்ள பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்வதற்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுமதி அளித்ததையடுத்து, அப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் இனியன் தலைமையில் அகழாய்வு பணிகள் இன்று தொடங்குகின்றன.

முன்னதாக இனியன், தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன், அகழாய்வு பணி மேற்பார்வையாளர் ஆர்.அன்பழகன், வேப்பங்குடி ஊராட்சித் தலைவர் ராஜாங்கம் உள்ளிட்டோர் நேற்று அகழாய்வு நடைபெற உள்ள இடத்தில் மேலாய்வு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியது: அகழாய்வுக்கு முன்னதாக, அதன் மேற்பரப்பில் சங்க காலத்தைச் சேர்ந்த பொருட்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே, தொழில்நுட்பக் கருவி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இன்று (ஜூலை 30) அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளன என்றனர்.

SCROLL FOR NEXT