Regional01

ஆலங்குளத்தில் இளைஞர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

ஆலங்குளம் அருகே லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் பெ.அருண்பாண்டி (30) உயிரிழந்தார்.

கீழப்பாவூர் பொன்னுசாமிநாடார் தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் அருண்பாண்டி (30). ஆலங்குளத்திலுள்ள இருசக்கர வாகன விற்பனையகத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவில் ஆலங்குளத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அடைக்கலப்பட்டணம் பூலாங்குளம் விலக்கு பகுதியில் எதிரே வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாயின. பலத்த காயமடைந்த அருண்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்கள்.

SCROLL FOR NEXT