மேட்டூர் அணை நீர்மட்டம் 79.14அடியானது. நீர்வரத்து விநாடிக்கு 29 ஆயிரத்து 666 கனஅடியாக உள்ளது.
கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 34 ஆயிரத்து 141 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 29 ஆயிரத்து 666 கனஅடியானது.
டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நீர் திறப்பைவிட நீர்வரத்து அதிகரித்து இருப்பதால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 77.43 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 79.16 அடியானது. நீர்இருப்பு 41.12 டிஎம்சி-யாக உள்ளது.