சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக் கான உடல்தகுதித் தேர்வு நேற்று 3-வது நாளாக நடைபெற்றது. இதில், பங்கேற்க நீண்ட வரிசையில் காத்திருந்த இளைஞர்கள் தாங்கள் வெற்றியுடன் திரும்புவோம் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக கட்டை விரலை உயர்த்திக்காட்டினர். படம்: எஸ்.குரு பிரசாத் 
Regional01

உடல்தகுதித் தேர்வில் 3-வது நாளில் 374 பேர் பங்கேற்பு :

செய்திப்பிரிவு

சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு நேற்று 3-வது நாளாக நடந்த உடல்தகுதித் தேர்வில் 374 பேர் பங்கேற்றனர்.

மூன்றாவது நாளாக நேற்று நடந்த உடல்தகுதித் தேர்வில் 374 பேர் பங்கேற்றனர். உடல்தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு மார்பளவு, ஓட்டம், உயரம், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளில் காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் வரும் 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தேர்வுகள் நடக்கவுள்ளன.

SCROLL FOR NEXT