குவைத்தில் தவிக்கும் தனது தாயை மீட்கக்கோரி பாட்டியுடன் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த கீர்த்தனா. (வலது) சித்ரா. 
Regional02

குவைத்தில் வேலைக்கு சென்ற தாயாரை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை : மீட்கக்கோரி 14 வயது சிறுமி ஆட்சியரிடம் மனு

செய்திப்பிரிவு

குவைத்தில்வேலைக்குச் சென்ற தனது தாயாரை வீட்டில் அடைத்து கொடுமைப்படுத்துவதால் அவரை மீட்கக்கோரி 14 வயது சிறுமி தனது பாட்டியுடன் சிவகங்கை ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.

காரைக்குடி அருகே வேப்பங்குளத்தைச் சேர்ந் தவர் பெரியசாமி. 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி சித்ரா(46), மகள் கீர்த்தனா (14) வறுமையில் வாடினர். 4 ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்தனாவை தனது தாயார் அழகம்மாளிடம்(80) விட்டுவிட்டு உறவினர் உதவியுடன் சித்ரா குவைத்தில் வீட்டு வேலைக்குச் சென்றார்.

அங்கிருந்து அவ்வப்போது பணம் அனுப்பினார். சில மாதங் களாக வீட்டின் உரிமையாளர் சித்ராவை வீட்டில் அடைத்து கொடுமைப்படுத்தி வருகிறாராம். மேலும் மகளிடம் பேசவிடாமல் தடுக்கிறாராம். இதுகுறித்து சித்ராவோடு பணி புரியும் ஊழியர் ஒருவர், கீர்த்தனாவின் மொபைலில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தனது தாயாரை மீட்டுத்தரக்கோரி கீர்த்தனா தனது பாட்டியுடன் சிவகங்கை ஆட்சியர் அலுவ லகத்தில் மனு கொடுத்தார்.

SCROLL FOR NEXT