Regional02

எஸ்எம்ஏ பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணத்தில் உள்ள எஸ்எம்ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிமற்றும் எஸ்எம்ஏ நேஷனல் பப்ளிக் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் கலந்துகொண்டு, டெங்கு விழிப்புணர்வு கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தார்.

மாவட்ட மலேரியா அலுவலர் குருநாதன், இளநிலை பூச்சியியல் வல்லுநர் பாலாஜி, நலக்கல்வியாளர் ஆறுமுகம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா ஆகியோர் சிறப்புரையாற்றினர். பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிகளை அகாடமிக் இயக்குநர் ராஜ்குமார் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர்கள் பாகீரதி, கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT