தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கல்லீரல் அழற்சி விழிப்புணர்வு தினம் நேற்று நடைபெற்றது. கர்ப்பிணி பெண்களுக்கு ஹெபாடிட்டீஸ் பரிசோதனையை தொடங்கி வைத்து, ஆட்சியர் கி.செந்தில்ராஜ் கூறியதாவது:
மருத்துவப் பணியாளர்களுக்கு ஹெபாடிட்டீஸ் தடுப்பூசிபோடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஹெபாடிட்டீ ஸில் 5 வகையான வைரஸ்கள்உள்ளன. ஒரேஊசியை பலருக்கு பயன்படுத்துவது, தரமற்ற ரத்தம் ஏற்றுவது, தரமற்ற உணவுகளை உண்பது, சுகா தாரமற்ற குடிநீரை அருந்துவதன் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.
தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில், 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் அளிக்கும் வகையில், ஆக்சிஜன் உற்பத்தி கருவி தலா ரூ.1 கோடிமதிப்பிட்டில் நிறுவப்பட உள்ளது. கோவில்பட்டியில் இன்னும் ஒருவார காலத்தில் இக்கருவி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2 அல்லது 3 வாரத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மின்தடை ஏற்பட்டாலும் தொடர்ந்து இயங்கும் வகையில்இதற்கென தனியாக ஜெனரேட்டர் வசதி சமூக பொறுப்பு நிதியில் இருந்து செய்யப்பட்டுள்ளது, என்றார் ஆட்சியர்.
மருத்துவமனை முதல்வர் டி.நேரு, துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன், மருத்துவ துணைகண்காணிப்பாளர் குமரன், பேறுகால துறை தலைவர் முத்துபிரபா, கல்லீரல் துறை தலைவர் செல்வ சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.