Regional02

சிறுமி திருமணம்: இளைஞர் கைது :

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள பாப்பாக்காபட்டியைச் சேர்ந்த ரங்கநாதன்- சாவித்திரி தம்பதியின் மகன் ஜெயபால் (29). இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் பொரணி ஏழுமலையான் கோயிலில் அண்மையில் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த தாந்தோணி ஒன்றிய சமூக நல அலுவலர் சரஸ்வதி, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் ஜெயபால், அவர் தாய் சாவித்ரி மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 3 பேர் மீது போலீஸார் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தனர். சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT