திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழா கருத்தரங்கம் ஆக.5-ம் தேதி நடைபெற உள்ளது.
திருவாரூர் மாவட்ட ஆதிரெங் கம் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
திருவாரூர் மாவட்டம் ஆதி ரெங்கம் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சார்பில், அரசின் வழிகாட்டுதல்படி சமூக இடைவெளியுடன் தேசிய நெல் திருவிழா, கண்காட்சி, கருத்தரங் கம் திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி ஏ.ஆர்.வி. திரு மண மண்டபத்தில் ஆக.5-ம் தேதி நடைபெற உள்ளது.
கருத்தரங்கத்தில், தமிழக அரசின் மாநில வளர்ச்சி கொள் கைக் குழு துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன், மாநில வளர்ச்சி கொள்கைக் குழு உறுப் பினர்கள் எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா,மருத்துவர் சிவராமன், மண்புழு விஞ்ஞானி பேராசிரியர் சுல்தான் அஹமது இஸ்மாயில், சூழலியல் வல்லுநர் பாமையன் மற்றும் வேளாண்மை துறை பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
விழாவில், விவசாயிகளுக்கு 174 வகையான பாரம்பரிய விதை நெல் இலவசமாக தலா 2 கிலோ வழங்கப்பட உள்ளது.
மேலும், பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ குணங்கள், பி.ஜி.எஸ். இயற்கை தரச் சான்றிதழ் பெறுவதன் அவசியம், இயற்கை வேளாண் பொருட்களை மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத் துதல் உட்பட பல்வேறு தலைப்பு களில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு 174 வகையான பாரம்பரிய விதை நெல் இலவசமாக தலா2 கிலோ வழங்கப்பட உள்ளது