Regional03

தடுப்பூசி மூலம் 80 சதவீதம் நிமோனியாவை கட்டுப்படுத்தலாம்; திருவாரூர் ஆட்சியர் தகவல் :

செய்திப்பிரிவு

தடுப்பூசி மருந்தின் மூலம் 80 சதவீதம் நிமோனியாவை கட்டுப்படுத்த முடியும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார்.

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கொடிக் கால்பாளையம் நகர ஆரம்ப சுகாதார நிலை யத்தில், குழந்தைகளுக்கு முதல் தவணை நிமோனியா தடுப்பூசி போடும் முகாமை, ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், எம்எல்ஏ பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் நேற்று தொடங்கிவைத்து, பார்வையிட்டனர்.

பின்னர், ஆட்சியர் கூறியது: நிமோனியா 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகள வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 15 சத வீதம் இறப்பை ஏற் படுத்துகிறது. இந்திய அளவில் 1.2 மில்லியன் குழந்தைகள் 5-வது வயதுக்குள் இறக்கின்றனர்.

நிமோனியா தடுப்பூசி மருந்தின் மூலம் 80 சதவீதம் நிமோனியாவை கட்டுப்படுத்த முடியும்.

திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 15,130 குழந்தைகள் தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் தடுப்பூசிகள் போடப்பட்டு பயன்பெற்று வருகின்றனர். இதில் 1,260 குழந்தைகளுக்கு முதல் தவணையாக 6-வது வாரத்தில் தடுப்பூசி போடப்படுவதன் மூலம், நிமோனியா மற்றும் மூளை காய்ச்சல் நோய் பாதிப்பு தடுக்கப்படுகிறது என்றார்.

நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் கீதா, கோட்டாட்சியர் பாலசந்திரன், வட்டாட்சியர் தனசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT