Regional03

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புகையிலை மற்றும்நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய்உள்ளிட்ட கொடிய நோய்கள் தாக்கம்ஏற்படும். தமிழகத்தில் புகையிலைமற்றும் நிகோட்டின் கலந்த உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வது,போக்குவரத்து செய்வது, இருப்பு வைப்பது மற்றும் சில்லறை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சில வணிகர்கள் வெளி மாநிலங்களிலிருந்து கொண்டுவந்து, கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர்.

இப்பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. வணிகர்கள் இவற்றைவிற்பனை செய்வது கண்டறியப்பட்டால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம்விதிக்கப்படுவதுடன், பதிவுச்சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு கடை மூடப்படும். குற்றவியல் வழக்குபதிவு செய்யப்பட்டு, மூன்றாண்டு சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க வழிவகை உள்ளது.

இதுகுறித்து புகார் அளிக்க 94440 42322 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம், அவ்வாறு புகார் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது..

SCROLL FOR NEXT