தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கோட்ட பேரவைக் கூட்டம் தி.மலை மாவட்டம் செய்யாறில் நடைபெற்றது.
கோட்டத் தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். துணை செயலாளர் ஐயப்பன், துணைத் தலைவர்கள் பூபாலன், ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின் ஊழியர் மத்திய அமைப்பு கொடியை கோட்ட செயற்குழு உறுப்பினர் ஏழுமலை ஏற்றி வைத்தார். மாநில செயலாளர்கள் சிவராஜ், காங்கேயன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், “மின்சாரம் சட்டம் – 2020-ஐ ரத்து செய்ய வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பணப் பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இறுதியில், மின் கணக்கீட்டாளர் முருகன் நன்றி கூறினார்.