கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் கெலவரப்பள்ளி அணையில் இருந்து நாளை (29-ம் தேதி) முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை 135 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
கெலவரப்பள்ளி அணையில் இடது புற கால்வாய் மூலம் 5,918 ஏக்கரும், வலதுபுற கால்வாயில் 2082 ஏக்கர் நிலம் என மொத்தம் 8 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்கள் பயன் பெறுகின்றன. இதன் மூலம் ஓசூர் வட்டத்தில் தட்டகானப்பள்ளி, பூதிநத்தம், பெத்தமுத்தாளி, முத்தாளி, வட்டுர், கதிரேப்பள்ளி, மாரசந்திரம், கொத்தூர், மோரனப்பள்ளி, தொரப்பள்ளி உள்ளிட்ட 22 கிராமங்கள் பயன்பெறுவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.