தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிதமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை வரவேற்று, தமிழக முதல்வருக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி நன்றி தெரிவித் துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கல்வி மற்றும் வேலைவாய்ப் பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கோரி, தமிழக வாழ்வுரி மைக் கட்சி மற்றும் வன்னியர் அமைப்புகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. கடந்த ஆட்சியில், பழனிசாமி தலைமையிலான அரசிடம், வன்னியர் அமைப்புகள் பலமுறை கோரிக்கை விடுத்தன. ஆனால், அக்கோரிக்கையை மதிக் காத பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, கடந்த பிப்ரவரி மாதம், வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. ஆனால், இது தற்காலிகமானதுதான் என்று பழனிசாமி புது விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார். இதனை உறுதி செய்யும் வகையில், 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்கள் பேசியிருந்தனர். இது தேர்தலுக்காக நடக்கும் நாடகம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி அப்போதே குற்றம்சாட்டியது.
பின்னர், திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம் பெற்று சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தேன்.
அதன்படி தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டா லின் ஆணையிட்டிருப்பது வரவேற்கதக்கது. அதோடு, சீர் மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீத உள் ஒதுக்கீடு நடை முறைப்படுத்தப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. இதன் மூலம்திமுக அரசானது சமூகநீதிக்கானது என்பது மீண்டும் நிருபணமாகிறது. முதல்வருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பாராட் டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.