சிவகங்கையில் மருத்துவ மாணவர் கொலை வழக்கில் மேலும் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே முத்து நகரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிறிஸ்டோபர் தங்களது தோட்டத்தில் மது அருந்திய 7 பேர் கொண்ட கும்பலை தட்டி கேட்டார். ஆத்திரத்தில் கிறிஸ்டோபரை அந்த கும்பல் குத்தி கொலை செய்தது. ஏற்கெனவே இக் கொலை தொடர்பாக மருது பாண்டி, நந்த குமார், வசந்த் ஆகிய மூவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று புதுக் குளத்தைச் சேர்ந்த சரவணன் (27), சிவகங்கை நேருபஜாரைச் சேர்ந்த ராகுல்பாலாஜி (23) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
தலைமறைவான மேலும் 2 பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.