Regional01

சேலம் மாநகர காவல்துறையில் - 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 பேர் பணியிட மாற்றம் :

செய்திப்பிரிவு

சேலம் மாநகர காவல்துறையில் இரு இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 6 பேர் பணியிடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாநகர காவல்துறையில் பணிபுரியும் இரு இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 6 பேரை பணிடம் மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டுள்ளார். இதன்படி நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் கற்பகம் சேலம் டவுன் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுக்கும், அங்கு பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் சாந்தா மாநகர கடுங்குற்ற தடுப்புப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சேலம் மாநகர காவல்துறையில் புதியதாக சிறப்பு உளவுப் பிரிவு தொடங்கப் பட்டுள்ளது. இப்பிரிவுக்கு, நுண்ணறிவு பிரிவு எஸ்ஐ கருணாநிதி மற்றும் அன்னதானப்பட்டி காவல் நிலைய ஏட்டுகள் வெங்கடேஷ், செந்தில் ஆகியோரும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கிச்சிப்பாளையம் எஸ்ஐ ராமகிருஷ்ணன், நுண்ணறிவுப் பிரிவுக்கு இடமாற்றம் செய்து, மாநகர காவல் ஆணையர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT