சேலம் சோனா கல்விக் குழுமத்தில் மேலாண்மைத் துறை மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சோனா கல்விக் குழும துணைத் தலைவர் தியாகு வள்ளியப்பா, மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி பேசியதாவது:
சோனா மேலாண்மைத் துறையில் மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணத்துக்கு மேலாக அதிக வருமானத்தில் வேலைவாய்ப்பை பெற்று தந்துள்ளது.
அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் தரும் சவுத் இந்தியன் வங்கியின் வேலைவாய்ப்பை மாணவி விஷ்வபிரியா பெற்றுள்ளார். நடப்பு (2021) கல்வியாண்டில், மொத்தம் ரூ.4.50 கோடி வருமானத்தில் வேலைவாய்ப்பை மாணவர்களுக்குப் பெற்றுத்தந்துள்ளோம். 2025-ம் கல்வியாண்டில் மொத்தம் ரூ.25 கோடி வருமானத்தில் வேலைவாய்பை பெற்றுத் தருவது எங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளோம் என்றார். கல்லூரி முதல்வர் செந்தில்குமார் கூறும்போது, “வேலை, தொழில் முனைவோர், குடும்ப வணிகம் என 3 வகையாக மாணவர்களுக்கான பயன்கள் மற்றும் தேவைகளை புரிந்து அதற்கேற்ப கல்வி, பயிற்சி தனித்துவமாக கொடுக்கப்பட்டு, மாணவர்களை வெற்றியாளர்களாக உருவாக்குகிறோம்” என்றார்.