Regional03

பர்கூர் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் எம்.எல்.ஏ., அலுவலக திறப்பு விழா நடந்தது. பர்கூர் எம்.எல்.ஏ., மதியழகன் தலைமை வகித்தார்.

ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ., செங்குட்டுவன், ஒன்றிய செயலாளர் கோவிந்தராசு, முன்னாள் எம்.பி., சுகவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., அலுவலகத்தை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்து குத்து விளக்கேற்றி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து எம்எல்ஏ, மதியழகன் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்டபொருளாளர் ராஜேந்திரன், முன்னாள் எம்பி வெற்றிச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT