Regional01

பிச்சை எடுக்க வைக்க குழந்தையை கடத்தியவர் திருச்சியில் கைது :

செய்திப்பிரிவு

திருச்சி மேலசிந்தாமணி பழைய கரூர் பைபாஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக் மனைவி அனீஷா(45). இவரது மகள் பாத்திமா(3). கடந்த 24-ம் தேதி சத்திரம் பேருந்து நிலைய கழிப்பறை பகுதியில் நின்று கொண்டிருந்த தனது குழந்தையை, உறையூர் கீழ வைக்கோல்காரத் தெருவைச் சேர்ந்த பாண்டியன் (47)என்பவர் கடத்திச் சென்று விட்டதாக கோட்டை காவல் நிலையத்தில் அனீஷா புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், பாண்டியன் அக்குழந்தையை வைத்து மத்திய பேருந்து நிலையம் பகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் அங்கு சென்று குழந்தையை மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT