Regional01

நெல்லை, தென்காசியில் நேரடியாக தேர்வான - 86 சப் இன்ஸ்பெக்டர்களுக்கு பணி நியமன ஆணை :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 37 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் வழங்கினார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சிலருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் பணிநியமன ஆணைகளை வழங்கியிருந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் 37 பேர் நேரடி காவல் உதவிஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிநியமன ஆணைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

தென்காசி

SCROLL FOR NEXT