தென்காசி மியாவாகி அடர்வனத்தில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. 
Regional01

அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு - மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி :

செய்திப்பிரிவு

தென்காசி, ஆயிரப்பேரி சாலையில் இரண்டாவது மியாவாகி அடர் வனத்தை உருவாக்க ப்ராணா மரம் வளர் அமைப்பு சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரக்கன்றுகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மியாவாகி அடர்வனத்தில் அரிய வகை நாட்டு மரக்கன்றுகள் மற்றும் மூலிகை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்துல் கலாம் உருவப் படத்துக்கு தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மலர் தூவி அஞ்சலி செலுத்தி, மரக்கன்றுகள் நட்டார். தொடர்ந்து, தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, தென்காசி நகராட்சி சுகாதார ஆய்வாளர் கைலாச சுந்தரம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மரக்கன்றுகள் நட்டனர். நாகலிங்கம், தேற்றான் கொட்டை, ருத்ராட்சை, மயிலை, நீர்க்கடம்பு, மனோரஞ்சிதம் உள்ளிட்ட அரிய வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.

SCROLL FOR NEXT