BackPg

நடிகை ஜெயந்தி மறைவுக்கு சந்திரபாபு நாயுடு இரங்கல் :

என். மகேஷ்குமார்

பழம்பெரும் நடிகை ஜெயந்தி (76) மறைவுக்கு தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி (76) பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று நள்ளிரவு உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, மலையாளம் என பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஜெயந்தியின் மறைவு குறித்து ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சந்திரபாபு நாயுடு வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘நடிகை ஜெயந்தியின் மரணம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மிக திறமையான நடிகையாக புகழ்பெற்றவர் ஜெயந்தி. அவரது இழப்பு இந்திய பட உலகிற்கே பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT