மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 34 ஆயிரத்து 144 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் ஒரேநாளில் 2 அடி உயர்ந்துள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 19 ஆயிரத்து 665 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 34 ஆயிரத்து 144 கனஅடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு12 ஆயிரம் கனஅடி திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 73.27 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 75.34 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 37.47 டிஎம்சியாக உள்ளது. நீர்வரத்துஅதிகரித்துள்ளதால் நீர்மட்டம் ஒரேநாளில் 2 அடி உயர்ந்துள்ளது.