வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் கரோனா நிவாரண உதவியாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், என வலியுறுத்தி நாட்டுப்புறக் கலைஞர்கள் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் அளித்த மனு விவரம்:
கரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக நாட்டுப்புற கலைஞர்களுக்கு எந்த ஒரு நிகழ்வும் இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதுவரை நாட்டுப்புற கலைஞர்கள் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கும், பதிவு செய்யாத கலைஞர்களுக்கும் எந்த ஒரு உதவியும் வரவில்லை.
எனவே, அரசு நிகழ்வு, திருமணம் மற்றும் கோயில் திருவிழாக்களில் எங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும். உதவித்தொகை பெறும் கலைஞர்கள் இறந்து விட்டால், அவர்களது குடும்ப வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, கரோனா நிவாரண உதவியாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். கோயில்களில் நாட்டுப்புற கலைஞர்களை பணியில் அமர்த்த பரிந்துரை செய்ய வேண்டும்.
நாமக்கல்லில் மனு