ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலையின கிராம மக்கள், இந்து ஊராளி, இந்து சோலகா உள்ளிட்ட சாதிச்சான்றிதழ்கள் மற்றும் வீட்டுமனைப்பட்டா பெற வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டத்தில் உள்ள குழியாடா, புதுக்காடு, தேவர்நத்தம், கீழ்மாவள்ளம், புதுத்தொட்டி, சென்டர்தொட்டி, அரேபாளையம், பனக்கள்ளி, தாளவாடி, தொட்டகாஜனூர், சிக்காஜனூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் சாதிச்சான்றிதழ் மற்றும் வீட்டுமனை கோரி மனு செய்திருந்தனர். இதில், 36 பேருக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் 63 பழங்குடியின மக்களுக்கு இந்து ஊராளி மற்றும் 75 பேருக்கு இந்து சோலகா சாதிச்சான்றிதழ்களை ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி வழங்கினார்.
தொடர்ந்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலையினகிராம மக்கள் இந்து ஊராளி, இந்து சோலகா உள்ளிட்ட சாதிச்சான்றிதழ்கள் மற்றும் வீட்டுமனைப்பட்டா வேண்டுபவர்கள் தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம், என்றார்.