சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத்தேர்வு மற்றும் நிலுவைத் தேர்வுமுடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.
இதுதொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் இணைவு பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் இளநிலை இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு, முதுநிலை இரண்டா மாண்டு,எம்சிஏ., மூன்றாமாண்டு மற்றும் படிப்புக் காலம் முடிந்து சென்ற மாணவர்களின் ஏப்ரல்-2021-ம் பருவத் தேர்வுகள், நிலுவைத் தேர்வுகள் ஆகியவை கடந்த ஜூன் 15-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை நடைபெற்றன.
இத்தேர்வு முடிவுகள் இன்று (நேற்று) வெளியிடப் பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.periyaruniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதள முகவரி மற்றும் இணைவுபெற்ற கல்லூரிகளிலும் அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது என்று தெரி வித்துள்ளார்.