Regional01

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு 10 ஆண்டு சிறை :

செய்திப்பிரிவு

விருத்தாசலம் அருகே உள்ள செம்பளாகுறிச்சியைச் சேர்ந்தவர் விஜயன் (24). இவர் அருகில் உள்ள பெரிய கண்டியங்குப்பத்தில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அப்போது, அப்பகுதிக்கு வந்துச் சென்ற 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவியுடன் விஜயன் பழகி வந்துள்ளார்.

அவரை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தற்கொலைக்கு முயன்றார்

இதுகுறித்து அந்த மாணவி விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 27-08-2017 அன்று புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விஜயனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்து வந்த நீதிபதி எம்.எழிலரசி, நேற்று தீர்ப்பளித்தார்.

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விஜயனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து போலீஸார் விஜயனை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT