Regional01

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் சௌந்தரபாண்டியன், மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, மாவட்டச் செயலர் பி.லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்டுவதை தடுக்க வேண்டும், காவிரி நடுவர் மன்றத்துக்கு ஆணையரை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் யார்கோல் என்ற இடத்தில் கட்டப்படும் தடுப்பணையை அகற்ற வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

SCROLL FOR NEXT